தீவிரமடையும் போர் பதற்றம்! நடுவானில் சுட்டுவீழ்த்தப்படும் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள்
ஈரானினால் இன்று (19) ஏவப்பட்ட 7 பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15 ட்ரோன்கள் என்பவற்றை தமது வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.
மோதல் ஆரம்பமான நாள் முதல் இதுவரை 334 பெலிஸ்டிக் ஏவுகணைகள், 15 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 1,714 ட்ரோன்களை தாம் எதிர்கொண்டுள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் QR குறியீடு பதிவில் தொடரும் சிக்கல்! போலி இணையத்தளங்கள் குறித்து பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை
ஈரான் பதிலடி தாக்குதல்
இந்த தாக்குதல்கள் காரணமாக இரண்டு இராணுவத்தினர் மற்றும் ஆறு பொதுமக்கள் உயிரிழந்துள்ளதோடு, 158 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானை வான்வழியாக கடுமையாக தாக்கியதை தொடர்ந்து ஈரான் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.
இதன் காணரமாக இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்கள் எழுந்துள்ளதுடன், வான், கடல் வழி பயணங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri