வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கை இளைஞன் : சந்தேகம் வெளியிட்ட மனைவி
குவைத்தில் வீடு ஒன்றில் சாரதியாக செயற்பட்ட நிலையில் இளைஞன் தீ விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
எனினும் கணவனுக்கு என்ன நடந்தது என்பது குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என கெக்கிராவ பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயார் மொஹமட் நுஸ்ரா கேட்டுக்கொண்டுள்ளர்.
குவைத்தில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்த 26 வயதான முகமது சமீர் சில தினங்களுக்கு முன்னர் தீ விபத்தினால் உயிரிழந்தார்.
மரணத்தில் சந்தேகம்
கணவருடன் பணியாற்றிய நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டதாக மனைவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக மனைவி குறிப்பிட்டுள்ளார்.
தனது கணவர் முகமது சமீர் மரணத்தில் பலத்த சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்த மரணம் குறித்து தனது கணவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளர் சந்தேகத்திற்கு இடமான பல தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முகேஷ் அம்பானியிடம் இருந்து ரூ 2.6 லட்சம் கோடி இழப்பீடு கோரும் இந்தியா... தீர்ப்பு மிக விரைவில் News Lankasri
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri