இரத்தினபுரி மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பு குழு தலைவராக சுந்தரலிங்கம் பிரதீப் நியமனம்
கொடகவெல பிரதேச செயலக பிரிவின் கொடகவெல, ஒபநாயக்க, வெலிகபொல பிரதேசங்களை உள்ளடக்கிய இரத்தினபுரி மாவட்டத்திற்கான பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவராக பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்( Sundaralingam Pradeep) நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால்(Anura Kumara Dissanayake) வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்,
கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினர் மக்கள் சேவையினை மாற்றான் தாய் மனப்பான்மையோடு மேற்கொண்டனர்.
இனிவரும் காலங்களில் எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளின் அடிப்படையில் தேசிய அபிவிருத்தி திட்டங்களுக்கு ஏற்புடையதாக பிரதேச மட்டத்தில் அரச நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சகல அபிவிருத்தி பணிகளையும் ஒருங்கிணைப்பு செய்வேன்.
அவற்றை பின்தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் வழிவகைகளை மேற்கொண்டு சகல மக்களுக்கும் இன, மத, மொழி, பிரதேச வாதங்கள் கடந்து பணிகளை மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |