வன்முறை மீதான நாட்டம் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிட்டது! ரணில்
காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் வன்முறை மீதான நாட்டமே போராட்டம் நீர்த்துப் போகக் காரணமாக அமைந்து விட்டது என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சி மற்றும் ஏனைய தரப்புகளுடன் நேற்று சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டபோது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஆரம்ப காலத்தில் கோட்டா கோ கம உள்ளிட்ட போராட்டக்களங்கள் அறவழிப் போராட்டங்களாக, வன்முறை தவிர்ப்பு போராட்டமாக இருந்த நிலையில் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு கிடைத்தது.
பாதுகாப்புத் தரப்பினரும் அவ்வாறான அமைதிப் போராட்டங்களை அடக்க தயக்கம் காட்டினர்.
நீர்த்துப் போன போராட்டம்
ஆனால் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஏனைய அரச கட்டடங்களை கைப்பற்றவும், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தவும் போராட்டக்காரர்கள் என்றைக்கு வன்முறையை நாடத் தொடங்கினார்களோ அன்றைக்கே போராட்டம் நீர்த்துப் போய்விட்டது.
அமைதிவழியில் ஆரம்பித்த போராட்டம் கடைசியில் வன்முறை காரணமாக தோல்வியடைந்து விட்டது என்றும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
காலிமுகத்திடலில் கூடாரங்களை அகற்ற ஆரம்பித்துள்ள போராட்டக்காரர்கள் |