காலிமுகத்திடலில் கூடாரங்களை அகற்ற ஆரம்பித்துள்ள போராட்டக்காரர்கள்
கொழும்பு - காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் உள்ள கூடாரங்களை அகற்றுவதில் போராட்டக்காரர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸாரின் அறிவிப்பு
காலிமுகத்திடலில் கூடாரங்கள், கொட்டகைகள் அமைத்திருப்பதன் மூலம் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அவற்றை அகற்றிக் கொள்ளுமாறும் பொலிஸார் போராட்டக்காரர்களுக்கு அறிவித்துள்ளனர்.
இன்று மாலை ஐந்து மணி வரை அதற்கான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
காலிமுகத்திடல் பகுதிக்கு வந்து மீண்டும் விசேட அறிவிப்பை வழங்கிய பொலிஸார் |
அகற்றப்படும் கூடாரங்கள்
அதற்கிடையே காலிமுகத்திடலில் கூடாரங்கள் மற்றும் கொட்டகைகளை அமைத்திருந்த போராட்டக்காரர்கள் பலரும் அவற்றை அங்கிருந்து அகற்ற ஆரம்பித்துள்ளனர்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், சென். ஜோன்ஸ் முதலுதவிப் படையணி, வழக்கறிஞர் சங்கம் என்பன போராட்டக்களத்தில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் தற்போதைக்கு போராட்டக்காரர்கள் பாதுகாப்பற்ற சூழலை உணரத் தலைப்பட்டுள்ளதாக சமூக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.