மகிந்த குடும்பத்திற்கு பதற்றத்தை ஏற்படுத்தும் நீதிபதிகள் விவகாரம் - முடிவில் மாறாத அநுர அரசு
உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளால் நீடிப்பதற்கான அரசின் திட்டம் தொடர்பில் கடும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, இந்த அரசியலமைப்புத் திருத்த மசோதா தொடர்பில் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
தற்போதைய உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதன் மூலம், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு எட்ட முடியும் என அரசாங்க தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படியே, இந்த மசோதா முன்வைக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறான கண்டனங்கள் எழுந்துள்ளன.
இவ்வாறிருக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இது குறித்து கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்நிலையில், ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்பில் பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படலாம். அதனாலேயே இவ்வாறு அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,