தெஹிவளையில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல்: இருவர் பலி
தெஹிவளையில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
10 மற்றும் 14 வயதான இரண்டு சிறுவர்கள் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
10 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், 14 வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் 52 வயதான தந்தை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைக்குண்டு தாக்குதலில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தெஹிவளை கஹவதன சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.