நாமலின் மேடையேறும் பிரபலங்கள் யார்..! நடுக்கத்தில் பிக்குமார்..
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இலங்கை அரசியல் களம் சூடுபடித்துள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி, நாமல் ராஜபக்ச தலைமையில் அனுராதபுரத்தில் இடம்பெறவிருந்த, பொதுஜன பெரமுனவின் கட்சி கூட்டத்தை சீர்குலைக்கும் வகையில் அரசாங்கம் அவரை கைது செய்ததாக நாமலின் ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தினர்.
அதேநேரம், நாமல் ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் குறித்த கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டவாறு இடம்பெறும் என அக்கட்சி அறிவித்தது.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாமலுக்கு பதிலாக அக்கூட்டத்தில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறிருக்கையில் தென்னிலங்கை அரசியல் களத்தில் அரசின் அதிரடி நடவடிக்கையால் அச்சம் ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.
நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,