ராஜகிரிய விபத்து வழக்கு: பாட்டலி சம்பிக்க நீதிமன்றில் முன்னிலை
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராகத் தொடரப்பட்ட 2016ஆம் ஆண்டு ராஜகிரிய வாகன விபத்து மற்றும் சாட்சியங்களை மறைத்ததாகக் கூறப்படும் வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த வழக்கின் முன்விசாரணைக் கூட்டத்தை எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி நடத்துமாறு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி உத்தரவிட்டார்.
16 குற்றச்சாட்டுகள்
16 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன்,கவனக்குறைவாக வாகனம் செலுத்தி மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தீப் சம்பத் குணவர்தனவுக்கு பலத்த காயம் ஏற்படுத்தியமை, விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து தப்பிச் சென்றமை மற்றும் போலி சாட்சியங்களை உருவாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதே சம்பவம் தொடர்பாக அவரது முன்னாள் சாரதி மற்றும் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஆகியோருக்கு எதிரான மற்றொரு வழக்கும் நவம்பர் 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.