ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு: ஒலி இடையூறுகளை தவிர்க்க பல விமானங்கள் இரத்து!
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் பிரித்தானியாவிற்கு சென்றுள்ளனர்.
லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தின் மேடையில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
ராணியின் இறுதிச் சடங்கு
இன்று அதிகாலை வரை ராணியின் உடல் அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கும்.
அதன்பின்னர், ராணியின் உடல் தாங்கி பேழை அரச மரியாதையுடன் இறுதிச் சடங்கிற்காக அருகிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.
இரத்து செய்யப்படும் விமானங்கள்
மகாராணியின் இறுதிச் சடங்கு நடைபெறும் நாளில், லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுகின்றன.
மறைந்த ராணிக்கு மரியாதை செலுத்தும் விதமாக விமானங்கள் இரத்து செய்யப்படுகின்றன.
2 நிமிட மவுன அஞ்சலி
ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தின் முடிவில் 2 நிமிட மவுன அஞ்சலி கடைபிடிக்கப்படும். அப்போது லண்டனில் விமான சத்தத்தால் ஒலி இடையூறுகளைத் தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஏற்கனவே திங்களன்று 50 விமானங்களை குறுகிய தூரத்திற்கு இரத்து செய்துள்ளது.
அதே நேரத்தில் விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு செல்லும் நான்கு அமெரிக்க விமானங்களை இரத்து செய்துள்ளது.
லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் காலை 11:40 மற்றும் மதியம் 12:10 மணி வரை 30 நிமிடங்களுக்கு விமானம் எதுவும் இயக்கப்படாது.
ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு
இந்த நடவடிக்கை ஆயிரக்கணக்கான பயணிகளை பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் சிரமத்திற்கு விமான நிலையம் முன்கூட்டியே மன்னிப்பு கேட்டது. எனினும், ஒலி இடையூறுகளைத் தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
