திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் மகாராணியின் இறுதி சடங்கு
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி கிரியை நாளை நடைபெறவுள்ள நிலையில், இறுதிச்சடங்கு பிரித்தானியா முழுவதும் சுமார் 125 திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதற்கமைய, பூங்காக்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் இறுதிச்சடங்கை காண திரைகள் அமைக்கப்படும் என்றும், ஊடகங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

பொது விடுமுறை அறிவிப்பு
1997ல் இளவரசி டயானாவின் இறுதிச்சடங்கு, 2012ல் லண்டன் ஒலிம்பிக்ஸ் என பிரித்தானிய வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
ராணியின் இறுதிச்சடங்கிற்கு அதிக மக்கள் வரக்கூடும் என்பதால் பலத்த ஏற்பாடுகளை செய்திருக்கும் அரசாங்கம் நாளை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

பிரித்தானிய ராணி 2 ஆம் எலிசபெத் தனது 96 ஆவது வயதில் கடந்த 8 ஆம் திகதியன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
பொதுமக்களின் அஞ்சலி

இதனையடுத்து, அவரது உடல் ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு லண்டனில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அரங்கில் ராஜ மரியாதையுடன் கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள எலிசபெத்தின் உடலுக்கு, ஏராளமானோர் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
May you like this Video
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam