மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நோக்கி படையெடுக்கும் வாகன உரிமையாளர்கள்
வாகன உரிமையாளர்கள், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் பெறுவதற்கான கியு.ஆர் (QR) குறியீட்டை பெற்றுக் கொள்வதற்காக வாகனங்களின் உரிமையை உறுதி செய்து கொள்ளும் நோக்கில் இவ்வாறு பலர் திணைக்களத்திற்கு வருகை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேரடி தொடர்பு கிடையாது
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வாகன உரிமையை உறுதி செய்து கொள்ளும் நோக்கில் திணைக்களத்திற்கு வருகை தரும் நபர்களின் எண்ணிக்கை அண்மைய நாட்களாக அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கியுஆர் குறியீடு வழங்கும் செயன்முறையுடன் தமது திணைக்களத்திற்கு நேரடி தொடர்பு எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருமான உரிமத்திற்கு அமைய மாகாண மட்டத்தில் இந்த தகவல்கள் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
திணைக்களத்தில் 90 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டாலும் இவற்றில் வீதியில் ஓடும் வாகனங்கள் பற்றிய விபரங்களை மாகாண ரீதியில் வருமான உரிமத்தினை வழங்கிய நிறுவனங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் கியுஆர் குறீயீடு வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.