ஈரானின் முழு சவுத் பார்ஸ் எரிவாயு வயலையும் வெடிக்க வைத்து தகர்ப்போம்: டிரம்ப் அதிரடி எச்சரிக்கை
ஈரானின் முழு சவுத் பார்ஸ் எரிவாயு வயலையும் அமெரிக்கா வெடிக்கச் செய்து தகர்க்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தள பதிவில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் மேலும், ஈரானின் முக்கிய எரிசக்தி மையமான சவுத் பார்ஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்காவோ அல்லது கட்டாரோ முன்னதாக அறிந்திருக்கவில்லை.
இஸ்ரேல் கோபத்தினால் தன்னிச்சையாக இத்தாக்குதலை நடத்தியுள்ளது. இத்தாக்குதலுக்குப் பதிலடியாக கட்டாரிலுள்ள திரவ இயற்கை எரிவாயு முனையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல் நியாயமற்றது மற்றும் அநீதியானது.

எச்சரிக்கை
ஈரான் மீண்டும் கட்டார் மீது தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலின் உதவி இல்லாமலேயே அமெரிக்கா ஈரானின் முழு சவுத் பார்ஸ் எரிவாயு வயலையும் வெடிக்கச் செய்து தகர்க்கும்.
இதுவரை ஈரான் கண்டிராத அல்லது பார்த்திராத ஒரு பெரும் சக்தியுடனும் ஆற்றலுடனும் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் முழுவதையும் தகர்த்துவிடும்.
இத்தகைய பேரழிவைத் நான் விரும்பவில்லை. ஆனால் கட்டார் மீண்டும் தாக்கப்பட்டால் இம்முடிவை எடுக்கத் தயங்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.