வரலாற்றில் கறைப்படிந்த நாளாக பதிவாகும் மகாராணியின் இறுதிச்சடங்கு (Video)
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி கிரியை நாளை நடைபெறவுள்ள நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் ஒன்றுகூட உள்ளமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
எனினும் மனித உரிமை உள்ளிட்ட விடயங்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு நாடாக அறியப்பட்ட பிரித்தானியா கொலை குற்றச்சாட்டு மற்றும் இனவழிப்பு குற்றங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் மகாராணியின் இறுதி கிரியையில் சுமார் 500 வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களில் ஒருவராக ஜோ பைடனும் இடம்பெற்றுள்ளார்.
ஐரோப்பா முழுவதிலும் உள்ள அரச குடும்ப உறுப்பினர்களும் மகாராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விருந்தினர்கள் பலர் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திலுள்ள ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் அதேவேளை லான்காஸ்டர் மண்டபத்திலுள்ள இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்குக்காக கொலை குற்றச்சாட்டு மற்றும் இனவழிப்பு குற்றங்களுக்கென தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட நாடுகளின் தலைவர்களும் மகாராணியின் இறுதி கிரியையில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படும் பட்சத்தில் அதுவொரு கறையாக அமைந்துவிடும் எனவும் பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக முழுமையான தகவல்களை தொகுத்து வழங்குகின்றது இக் காணொளி,
லண்டன் முழுவதும் பலத்த பாதுகாப்பு! 2,000க்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்கள் வருகை |
ராணியாரின் இறுதி நாட்கள் - கசிந்த தகவல்கள் |
மகாராணி இரண்டாம் எலிசபெத்தை கொலை செய்ய நடந்த பல சதிகள்! வெளிவரும் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் |