லண்டன் முழுவதும் பலத்த பாதுகாப்பு! 2,000க்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்கள் வருகை
பிரித்தானிய ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக உலகத்தலைவர்கள் பிரித்தானியாவிற்கு படையெடுத்துள்ளனர்.
லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய ராணியின் கணவர் மன்னர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைக்கு அருகே எதிர்வரும் 19 ஆம் திகதி ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் லண்டன்
ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்குமாறு ஏறக்குறைய அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும், அரச குடும்பம் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், இறுதி சடங்கில் 2,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக லண்டன் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் காணப்படும் என்றும், லண்டனுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களைப் பாதுகாக்க, பிரித்தானிய எம்ஐ5 மற்றும் எம்ஐ6 உளவுத்துறை நிறுவனங்கள், லண்டனின் பெருநகர பொலிஸ் மற்றும் இரகசிய சேவை ஆகியவை இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,ராணியின் இறுதி சடங்கில் சுமார் 7.5 இலட்சம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam