பிரித்தானியாவில் நிரந்தரக் குடியுரிமை பெற தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு புதிய நடைமுறை
பிரித்தானியாவில் நிரந்தரக் குடியுரிமை பெற விரும்பும் வெளிநாட்டவர்கள் உயர்தர ஆங்கில மொழித் பரீட்சையில் சித்தி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை பிரித்தானிய நீதி மற்றும் உள்விவகாரத் துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதுவரை காலமும் 'GCSE' நிலைக்கு இணையான அடிப்படை ஆங்கில அறிவு போதுமானதாக இருந்தது. இந்நிலையில் இனி 'A-Level' தரத்திற்கு இணையான தேர்ச்சி அவசியமாகும்.
வெளிநாட்டவர்களுக்கு புதிய நடைமுறை
வெளிநாட்டவர்கள் பிரித்தானிய சமூகத்துடன் முழுமையாக ஒன்றிணைவதையும், உள்ளூர் மக்களுடன் சரளமாக உரையாடுவதையும் உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.
புதிய விதிகளின்படி, விண்ணப்பதாரர்கள் வாசித்தல், எழுதுதல், பேசுதல் மற்றும் கேட்டல் ஆகிய நான்கு திறன்களிலும் தங்களின் புலமையை நிரூபிக்க வேண்டும்
இதற்கான அதிகாரப்பூர்வ நடைமுறைகள் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அமலுக்கு வருகின்றன.
காலம் அவகாசம்
இதனால் தற்போது பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரித்தானியா சென்றுள்ள புலம்பெயர்ந்தோர் இத்தேர்வுக்குத் தயாராக ஒரு ஆண்டு காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களுடன், நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கான காத்திருப்பு காலமும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
பெரும்பாலான வெளிநாட்டவர்கள் 5 ஆண்டுகளுக்குப் பதில் 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri