ஈரானில் இருந்து இலங்கைக்கு வந்த அழைப்பு! போர்க்கப்பல் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளின் "இராணுவ ஆக்கிரமிப்பு" மற்றும் ஈரானிய கப்பல் மீதான தாக்குதல் குறித்து ஈரான் வெளி விவகார அமைச்சர் செய்யது அப்பாஸ் அரக்ச்சி, இலங்கையின் வெளி விவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் தொலைபேசி வாயிலாக விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, கடந்த மார்ச் 4ஆம் திகதி அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட 'தேனா' (Dena) என்ற ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மாலுமிகளை மீட்டதற்கும், உயிரிழந்த 84 பேரின் உடல்களைத் தாயகத்திற்கு அனுப்ப உதவியதற்கும் ஈரான் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
ஈரானிலிருந்து வந்த அழைப்பு
காலி கடற்பரப்பிற்கு அப்பால் 40 கடல் மைல் தொலைவில் அமெரிக்காவால் தாக்கப்பட்ட ஈரானியக் கப்பலில் இருந்த 32 மாலுமிகளை இலங்கை கடற்படை மீட்டுள்ளது. காயமடைந்த அவர்கள் கராபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

மீட்கப்பட்ட மாலுமிகளை மீண்டும் ஈரானுக்கு அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா இலங்கையிடம் கோரிக்கை விடுத்திருந்தது. எவ்வாறாயினும், சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக ஈரான் தூதரகத்தின் ஊடாக 84 உடல்களும் ஈரானுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றத்தை குறைக்க இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் அவசியம் என இலங்கை வெளி விவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்திற்கு வர அனுமதி கோரிய மற்றுமொரு ஈரானியக் கப்பலான 'IRIS Bushehr' மற்றும் அதன் 208 ஊழியர்கள் தற்போது இலங்கை பாதுகாப்பில் உள்ளனர்.
இந்த இக்கட்டான சூழலில் இலங்கை காட்டிய மனிதாபிமான உதவியை ஈரான் பெரிதும் பாராட்டியுள்ளது. ஈரானுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையிலான இந்த மோதல் போக்கு, ஆசியப் பிராந்தியத்தில் இராஜதந்திர நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது.
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்... எங்கே பாருங்க போட்டோஸ் Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam