வித்தியாசமான முறையில் ராணிக்கு அஞ்சலி செலுத்திய இந்தியர்கள்
பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் மறைவு உலகளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாம் எலிசபெத் ராணியின் மரணத்திற்கு பிரித்தானிய மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மணல் சிற்பம்
இந்நிலையில், இந்திய மணல் சிற்பக் கலைஞர்கள், மகாராணியின் பிரம்மாண்ட மணல் சிற்பங்களை உருவாக்கி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ஒடிசாவின் பூரியைச் சேர்ந்த புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரான மனாஸ் சாஹூ, கோல்டன் சீ பீச் என்றழைக்கப்படும் தங்கக் கடற்கரையில் எலிசபெத் ராணியின் அழகான, பிரமாண்டமான மணல் சிற்பத்தை உருவாக்கி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதேவேளை, இன்னொரு பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்கும் மகாராணியின் அழகான சிற்பத்தை பூரி கடற்கரையில் உருவாக்கி அதை 740 ரோஜாக்களால் அலங்கரித்துள்ளார்.
இறுதி கிரிகை
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி கிரிகை எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சார்ள்ஸ் பதவியேற்பு
இதேவேளை, பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து வேல்ஸ் முன்னாள் இளவரசர் சார்ள்ஸ் பிரித்தானிய மன்னராக அதிகார பூர்வமாக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்பு நிகழ்வு செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் நடைபெற்றுள்ளது.