மகா ராணியின் மறைவினால் சோகத்தில் மூழ்கிய பிரித்தானியா! 96 முறை ஒலித்த மணி
பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை ஒட்டி, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் கதீட்ரல் தேவாலயத்தில், ராணி எலிசபெத் வாழ்நாளின் ஒவ்வொரு ஆண்டை குறிக்கும் வகையில் 96 முறை மணிகள் ஒலித்தன.
70 ஆண்டுகளுக்கும் மேலாக பிரித்தானிய நாட்டின் அரசியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால், 96வது வயதில் பால்மோரல் அரண்மனையில் நேற்று காலமானார்.

இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள்
இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.
பிரித்தானியாவின் நீண்ட கால முடியாட்சியை நடத்தி வந்த மகா ராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு, 96 வயதில் பால்மோரலில் நேற்று காலமாகியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் லண்டனுக்கு எடுத்துச்செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ராணியின் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் மூன்று நாட்கள் வைக்கப்பட்டு 10 ஆவது நாள், அரசு முறைப்படி இறுதிச்சடங்குகள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என தெரியவந்துள்ளது.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்.. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் ஒளிபரப்பு எப்போது தெரியுமா? Cineulagam
நீங்கள் சிரிக்கவே மாட்டீர்களா? பெண் செய்தியாளரை பார்த்து டிரம்ப் கேட்ட கேள்வி: வெடித்த புதிய சர்ச்சை News Lankasri