கால்பந்து போட்டியில் இரு அணிகளுக்கிடையே வெடித்த மோதல்!
ஹட்டன் - டன்பார் மைதானத்தில் இடம்பெற்ற கால்பந்துப்போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டத்தின்போது, இரு தரப்பினர் கைகலப்பில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவுயுள்ளது.
ஹட்டனில் உள்ள இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின்போது இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
போட்டி ஏற்பாட்டாளர்களின் முடிவு
ஆட்டம் முடிய 7 நிமிடங்கள் இருந்தபோது இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது ஆட்டத்தைக்காண வந்திருந்த பார்வையாளர்கள் மைதானத்திற்குள் நுழைந்து கைகலப்பில் ஈடுபட்டதால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

மோதல் குறித்து முறைப்பாடு கிடைத்தவுடன், ஹட்டன் பொலிஸார் உடனடியாக மைதானத்திற்கு விரைந்து நிலைமையை சரிசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, போட்டி குறித்து ஏற்பாட்டாளர்கள் எதிர்காலத்தில் முடிவெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நேபாளத்தில் பெரு வெள்ளம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய 8 வயது சிறுவன்: மகனை தேடி அலைந்த தாய் News Lankasri
வெனிசுலாவின் மொத்த எண்ணெய் வளத்தையும் கைப்பற்றும் அமெரிக்கா... ட்ரம்பின் புதிய ஒப்பந்தம் News Lankasri