பேருந்து கட்டண கொடுப்பனவு முறையில் ஏற்படவுள்ள மாற்றம்
போக்குவரத்து துறையின் சவால்களை வெல்வதற்காக அரசாங்கம் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாக பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் நெடுஞ்சாலைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டாலும் போக்குவரத்து துறையின் மீது போதிய கவனம் செலுத்தப்படவில்லை.
எனவே பொதுப் போக்குவரத்து துறையை ஈர்ப்புமிக்கதாக மாற்றுவது அரசாங்கத்தின் இலக்கு என பிரதியமைச்சர் கூறினார்.
பண அட்டைகள்
அரச ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

பேருந்துகளில் டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை இலங்கை போக்குவரத்து சபையோ, தனியார் பேருந்துகளின் உரிமையாளர்களோ முறையாக பெறாமல் இருப்பது சிக்கலாகும்.
எதிர்காலத்தில் பண அட்டைகள் மூலம் டிக்கெட் கட்டணங்களை செலுத்தக்கூடிய முறை நடைமுறைக்கு பட்சத்தில் இந்த நெருக்கடிக்கு தீர்வு காணாமல் என பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையை முறையாக கட்டியெழுப்புவதற்கு, சேவைக்கான நிலவும் இடங்களில் புதிய நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.