தமிழ் தொழிலதிபரின் மர்ம மரணம்: மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் ஏற்பட்டுள்ள திருப்பம்

CID - Sri Lanka Police NPP Government Dinesh Schaffter
By Kanthan Aug 29, 2026 03:15 AM GMT
Report

கொழும்பில் கடத்தப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மீண்டும் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளன. 

கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர் கடந்த 2022 ஆம் ஆண்டு பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

பல கோணங்களில் விசாரணைகள் 

இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் நிறைவேற்றுக்குழு பணிப்பாளரும், பிரபல தமிழ் தொழிலதிபருமான தினேஷ் சாப்டர் மரணமடைந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவரின் மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

தமிழ் தொழிலதிபரின் மர்ம மரணம்: மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் ஏற்பட்டுள்ள திருப்பம் | Dinesh Schaffter Case Cid Npp      

இச்சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு கடந்த அரசாகத்தில் மந்த நிலையை அடைந்து மறைக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மரணம் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு முன்னேற்றமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) தினேஷ் ஷாப்டர் தொடர்பான புதிய விசாரணைகளை முன்னெடுத்து செல்கின்றது.

கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கும் தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கும் இடையே பாரிய வித்தியாசம் இல்லாத வகையிலேயே விசாரணைகள் இடம்பெறுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், சில சம்பவங்கள் அதாவது சில அறிவியல் சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த சான்றுகளின் அடிப்படையில் இது ஒரு கொலைச் சம்பவமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதுடன், அதனை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் சில ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் அவருக்கு கிடைத்த மற்றும் அவரிடமிருந்து அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் மின்னஞ்சல்கள் (Email) தொடர்பான தகவல்களை பகுப்பாய்வு செய்வதற்காக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பப்பட்டுள்ளது.

உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள்  

உயிரிழந்த நபர் வழக்கமாகப் பயன்படுத்தும் மொழி மற்றும் பாணிக்கு முற்றிலும் பொருந்தாத வேறு ஒரு பாணியிலேயே அந்த SMS மற்றும் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, உண்மையிலேயே அதை அவர் தான் அனுப்பினாரா அல்லது இதில் மூன்றாம் தரப்பு ஏதும் தலையிட்டுள்ளார்களா என்பது குறித்தே தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தமிழ் தொழிலதிபரின் மர்ம மரணம்: மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் ஏற்பட்டுள்ள திருப்பம் | Dinesh Schaffter Case Cid Npp    

மின்னஞ்சல்களுக்கு மூன்றாம் தரப்பு யாரேனும் தலையிட்டிருந்தால் நிச்சயமாக இது ஒரு கொலை என்பதை உறுதிப்படுத்தி விசாரணைகள் முடுக்கி விடப்படும் என்பதன் காரணமாக, அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையைப் பெற்றுக்கொள்வதற்காக தேவையான அனைத்து தகவல்களும், அறிக்கைகளும் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், விசாரணைகளில் சில விடயங்கள் நம்பகத்தன்மையற்றதாக தோன்றினாலும், அவற்றை உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள் இன்னும் சரியாக கிடைக்கவில்லை என்றும் புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இந்த விசாரணை சரியாக முன்னெடுக்கப்பட்டு எதிர்காலத்தில் ஒரு சரியான அறிக்கை கிடைக்கும் என்றும், அவை அரச இராசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையுடன் ஒப்பிடப்பட்டு உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகின்றது.

களுத்துறையில் பாரியளவிலான சட்டவிரோத மதுபான உற்பத்தி மையம் முற்றுகை

களுத்துறையில் பாரியளவிலான சட்டவிரோத மதுபான உற்பத்தி மையம் முற்றுகை

மனைவியை காட்டுக்குள் அழைத்து சென்று கொடூரமாக படுகொலை செய்த கணவன்

மனைவியை காட்டுக்குள் அழைத்து சென்று கொடூரமாக படுகொலை செய்த கணவன்

பெண்களை ஏமாற்றிய பெண் செய்த மோசமான செயல் - விசாரணையில் அம்பலமான ரகசியம்

பெண்களை ஏமாற்றிய பெண் செய்த மோசமான செயல் - விசாரணையில் அம்பலமான ரகசியம்

  

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US