களுத்துறையில் பாரியளவிலான சட்டவிரோத மதுபான உற்பத்தி மையம் முற்றுகை
களுத்துறை மாவட்டத்தின் மொரொந்துடுவைப் பிரதேசத்தில் நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்த சட்டவிரோத மதுபானஉற்பத்தி மையமொன்றை பொலிசார் திடீர் முற்றுகையிட்டு, சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது அங்கிருந்த 6,048 லிட்டர் கோடாவுடன் 5 செப்புச் சுருள்கள் மற்றும் 3 எரிவாயு அடுப்புகள் என்பனவும் பொலிசாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பொலிஸ் விசாரணை
மொரொந்துடுவ பகுதியில் நடத்தப்பட்ட ஒரு விசேட சோதனையில், குறித்த சட்டவிரோத மதுபான மையம் கண்டறியப்பட்டு, திடீர் சுற்றிவளைப்பு மூலம் மேற்கண்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் இவ்வளவு பெரிய அளவிலான கோடா ஒரே நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது, இதுவே முதல் தடவையாகும் என்றும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறிப்பிட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி மையத்தின் பின்னால் உள்ள முக்கிய வலையமைப்பையும் சந்தேக நபர்களையும் அடையாளம் காண விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri