கோட்டாபய ஆட்சிக்காலத்தில் மக்களுக்காக குரல் கொடுத்தவர்களின் நிலை.. சஜித் தரப்பு குற்றச்சாட்டு
அரகலய போராட்டத்திற்காக அன்று குரல் கொடுத்த போது சட்ட வல்லுநர்களாகப் பாராட்டுப் பெற்றவர்கள், இன்று கறுப்பு அங்கிப் பேர்வழிகளாக அரசாங்கத்தினால் சித்தரிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி கண்டி அமைப்பாளர் ஹேமப்ரிய கவிரத்ன தெரிவித்துள்ளார்.
முன்வைக்கும் குற்றச்சாட்டு
மேலும் அவர், கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மிரிஹானாவில் கைது செய்யப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்து ஜனநாயகத்திற்காக நின்ற இலங்கை சட்ட வல்லுநர்கள் சங்கம், இன்று இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர உதவியதற்காக வருந்தும் அளவிற்கு மாறிவிட்டது.

அன்று மக்களுக்காகக் குரல் கொடுத்த அதே சட்ட வல்லுநர்கள் சங்கம், இன்று 'திருடர்களாகவும், மோசடிக்காரர்களாகவும், கறுப்பு அங்கி அணிந்தவர்களாகவும்' அரசாங்கத்தினால் விமர்சிக்கப்படும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.
புனிதமான மஞ்சள் அங்கியை ஒருபுறமும், சட்ட வல்லுநர்களின் கறுப்பு அங்கியை மறுபுறமும் ஊழல்வாதிகளின் குவியலில் வீசி, விமர்சனங்களை அடக்க தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றும் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.