இலங்கையில் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் உயிரிழப்பதற்கு ஏதுவாகும் பழக்கம் !

Sri Lanka Alcohol
By Kamal Aug 28, 2026 09:13 PM GMT
Report

 இலங்கையில் மதுபானம், புகையிலை மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டினால் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி மனோஜ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வரும் 'ரடம எகடட' போதைப்பொருள் தடுப்பு மற்றும் கல்விப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

நாட்டில் தினமும் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளுக்குக் காரணமான வேறு எந்தவொரு ஒற்றைக் காரணியும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இறப்பு

போதைப்பொருள் சார்ந்த இறப்புகளில் புகைபிடிக்கும் பழக்கமே (புகையிலை) முதன்மையான காரணியாக உள்ளது எனவும் மதுபான நுகர்வினால் மட்டும் நாளொன்றுக்கு 10 முதல் 15 பேர் வரை உயிரிழப்பதாகக் கணிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் உயிரிழப்பதற்கு ஏதுவாகும் பழக்கம் ! | 80 100 People Die Daily In Sri Lanka

சட்டவிரோத போதைப்பொருட்களால் நேரடியாக ஏற்படும் இறப்புகள் குறித்து விரிவான ஆய்வுகள் இன்னும் பூர்த்தியடையவில்லை என்றாலும், பிற சட்டவிரோத போதைப்பொருட்களால் தினமும் 10 முதல் 15 பேர் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாகத் தரவுகள் உணர்த்துவதாக தெரிவித்துள்ளார்.

புகையிலை, மதுபானம் மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்கள் ஆகிய அனைத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது, தினமும் 80 முதல் 100 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

தடுப்பு நடவடிக்கைகள்

சட்டவிரோத போதைப்பொருட்களின் பயன்பாடு நாட்டில் கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த கலாநிதி மனோஜ் பெர்னாண்டோ, புகையிலை மற்றும் மதுபானம் போன்ற சட்டப்பூர்வமான பொருட்களே ஒருவர் கடுமையான போதைப்பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கான முதன்மை நுழைவு வாயிலாக அமைவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் உயிரிழப்பதற்கு ஏதுவாகும் பழக்கம் ! | 80 100 People Die Daily In Sri Lanka

ஹெராயின் போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர், அதற்கு முன்பாகத் தீவிரமாகப் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருந்துள்ளனர். கஞ்சா பயன்படுத்துபவர்களில் பலர், ஆரம்பத்தில் மதுபானம் அல்லது சிகரெட் பயன்படுத்தியவர்களாவர்.

போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தனிநபர் ஆரோக்கியம், சமூகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பாதிப்புகள் மிகக் கடுமையானவை என்பதால், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுப் பிரசாரங்களுக்கு அரசு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.  

கல்முனை வைத்தியசாலையில் பெண்ணிற்கு நடந்தது சூழ்ச்சியா! வைத்தியர் சுகுணனை விடாது துரத்தும் ஆபத்து

கல்முனை வைத்தியசாலையில் பெண்ணிற்கு நடந்தது சூழ்ச்சியா! வைத்தியர் சுகுணனை விடாது துரத்தும் ஆபத்து

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US