500 கிலோகிராம் மீனுடன் 3 கடற்றொழிலாளர்கள் கைது..! சோதனை சாவடியில் சிக்கிய வெடிப்பொருள்
மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை இன்று(28.08.2026) கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்த மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
500 கிலோகிராம் மீன்கள் பறிமுதல்
மன்னார் பிரதான பாலத்திற்கு அருகே உள்ள கடற்படை சோதனைச் சாவடியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, டைனமைட் வெடி பொருளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்களிடம் இருந்த மீன்கள், வெளி இணைப்பு இயந்திரம், படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் மீன்பிடி நடவடிக்கை தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பின்னர், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைப்பற்றப்பட்ட மீன்கள் மேலதிக பரிசோதனைக்காக நாரா நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.



16-வது திருமண நாளைக் கொண்டாடும் நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதி ... குவியும் வாழ்த்துக்கள் Manithan