உலகில் குறைந்த ஊதியம் பெறும் நாடுகளில் இலங்கை பெற்றுள்ள இடம்
உலகளாவிய குறைந்தபட்ச ஊதிய ஒப்பீட்டில், கணக்கெடுக்கப்பட்ட 130 நாடுகளில் இலங்கை 120ஆவது இடத்தில் உள்ளது
வாழ்க்கைச் செலவு மற்றும் தொழிலாளர்களின் கொள்வனவு திறனைக் கருத்திற்கொண்டு கணக்கிடப்பட்ட இந்தத் தரவு அடிப்படையில், இலங்கையின் குறைந்தபட்ச ஊதியத்தின் கொள்வனவுத் திறன் 200 அமெரிக்க டொலர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது
சுவிட்சர்லாந்து (3,804 டொலர்), ஜெர்மனி (2,928 டொலர்), ஐக்கிய இராச்சியம் (2,902 டொலர்) மற்றும் நெதர்லாந்து (2,876 டொலர்) ஆகிய நாடுகள் முதல் இடங்களிலும் உள்ளன.

ஆசியாவில் தென் கொரியா (2,362 டொலர்) 11ஆவது இடத்தையும், ஜப்பான் (1,839 டொலர்) 16ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் (68 வது இடம் - 570 டொலர்), நேபாளம் (78 வது இடம் - 490 டொலர்), பங்களாதேஷ் (89 வது இடம் - 379 டொலர்) மற்றும் இந்தியா (111 வது இடம் - 233 டொலர்) ஆகிய நாடுகள் இலங்கையை விட முன்னிலையில் உள்ளன.
இலங்கைக்குக் கீழே நைஜர், பூட்டான், கானா போன்ற வெறும் 10 நாடுகள் மட்டுமே உள்ளன. இந்த மதிப்பீடுகள் நேரடி அமெரிக்க டொலர் வருமானத்தின் அடிப்படையில் அல்லாமல், அந்தந்த நாடுகளின் உள்நாட்டு கொள்வனவு திறனின் அடிப்படையில் (வரி மற்றும் பிற கொடுப்பனவுகள் இல்லாமல்) கணக்கிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12
இப்படம் ஓடவில்லை என்றால் கண்டிப்பாக நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன்... நடிகை பரபரப்பு பேச்சு... Cineulagam