நாளை பல பகுதிகளில் 8 மணி நேர நீர்வெட்டு
அனுராதபுரத்தின் பல பகுதிகளில் நாளை (22.10.2026) 8 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நீர் வெட்டு மேற்கொள்ளப்படும்.
நீர் விநியோகத் தடை
நுகர்வோருக்கு சிறந்த தரமான நீர் சேவைகளை வழங்கும் நோக்கில், அனுராதபுரம் திருவில நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்படும் பகுதிகள் விஜேபுர நீர் வழங்கல் அமைப்பு - விஜேபுர, பலடிக்குளம், நெலும்குளம் மற்றும் கவரைக்குளம்.
நச்சதுவ நீர் வழங்கல் அமைப்பு - நச்சதுவ, ஹிடோகம, துருவில மற்றும் நெல்லிக்குளம்.
தலாவா நீர் வழங்கல் அமைப்பு - தலாவா, ஸ்ரவஸ்திபுரா மற்றும் டிகே கனுவ.
நீர் விநியோகத் தடை காரணமாக நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை வருத்தம் தெரிவிப்பதோடு, பொதுமக்கள் தண்ணீரைச் சேமித்து, முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.
மகிந்தவின் உயிரைப் பறிக்கும் பாரிய சதித் திட்டம்! நீதிமன்ற சாட்சியத்தை அம்பலப்படுத்தும் சரத் வீரசேகர
பிரான்சில் வார இறுதியில் மீண்டும் போராட்டங்கள்: காவல்துறைக்கு ஆதரவாக களமிறங்கும் ராணுவம் News Lankasri
20ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்தில் சூர்யாவின் வித்தியாசமான ஸ்டைல்! பின்னணி என்ன தெரியுமா? Manithan