விமான சேவை மீது சைபர் தாக்குதல் : ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்ட தகவல்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப (IT) அமைப்புகள் ஹேக் (ஊடுருவல் ) செய்யப்பட்டுள்ளதாக வெளியான ஊடகச் செய்திகள் மற்றும் அறிக்கைகளை அந்த நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
2026, ஜூன் 29 அன்று வெளிநாட்டில் வெளியிடப்பட்ட ஒரு இணையத் தாக்குதல் தொடர்பான கூற்றே இந்த வதந்திகளுக்குக் காரணம் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பணப் பரிமாற்ற கோரிக்கை
குறித்த தகவல் வந்தவுடன் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், எந்தவொரு அங்கீகரிக்கப்படாத ஊடுருவலோ, தரவு திருட்டோ அல்லது சேவைத் தடையோ ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் வசதிகள் உட்பட அனைத்துச் சேவைகளும் எந்தவிதத் தடையுமின்றி வழமைபோல் இயங்குகின்றன.
அத்துடன், ஹேக்கர்களிடமிருந்து எவ்விதமான பணப் பரிமாற்ற (Ransom) கோரிக்கைகளும் வரவில்லை எனவும் விமான நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
மகிந்தவின் உயிரைப் பறிக்கும் பாரிய சதித் திட்டம்! நீதிமன்ற சாட்சியத்தை அம்பலப்படுத்தும் சரத் வீரசேகர
பிரான்சில் வார இறுதியில் மீண்டும் போராட்டங்கள்: காவல்துறைக்கு ஆதரவாக களமிறங்கும் ராணுவம் News Lankasri
20ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்தில் சூர்யாவின் வித்தியாசமான ஸ்டைல்! பின்னணி என்ன தெரியுமா? Manithan