கணேமுல்ல சஞ்சீவவின் கொலை விவகாரம்! இஷாரா செவ்வந்தியிடமிருந்து மீண்டும் வாக்குமூலம்
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, அங்குனுகொல பெலஸ்ஸ சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடமிருந்து வாக்குமூலம் பெற கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகம முன்னிலையில் இன்று (28) மனுவைத்தாக்கல் செய்யும் போது, கொழும்பு குற்றப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
செவ்வந்தியிடமிருந்து வாக்குமூலம்
இந்த சம்பவம் தொடர்பான விபரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விசாரணை அதிகாரிகள், கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்த சந்தேகநபரிடமிருந்து வாக்குமூலம் பெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், 2 ஆம் திகதி அங்குனுகொல பெலஸ்ஸ சிறைக்குச் சென்று வாக்குமூலம் பெற அனுமதி வழங்குமாறு கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக சிறை கண்காணிப்பாளருக்கு தெரிவிக்குமாறும் கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளது.
இதன்போது சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளை கருத்தில்கொண்ட நீதிபதி, கோரிக்கை தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இப்படம் ஓடவில்லை என்றால் கண்டிப்பாக நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன்... நடிகை பரபரப்பு பேச்சு... Cineulagam