கொழும்பில் மருந்தகம் சுற்றிவளைப்பு - கைப்பற்றப்பட்டுள்ள மருந்துகள்
அரசாங்க மருத்துவமனைகள் தவிர வேறெந்த இடத்திலும் விற்பனை செய்வதற்குத் தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்த மருந்தகம் ஒன்று கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - மருதானை பிரதேசத்தில் அமைந்திருந்த மருந்தகம் ஒன்றே இவ்வாறு அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருளுக்கு பயன்படுத்தும் மாத்திரைகள்
குறித்த மருந்தகத்தில் போதைப்பொருளுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள் மருத்துவரொருவரின் பரிந்துரையின்றி விற்பனை செய்யப்பட்டு வந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அதிகாரிகளும் மருதானை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போது, நரம்பியல் நோயாளிகளுக்கு வழங்கப்படும் வலி நிவாரணி மருந்துகள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

8 வகை மருந்துகள் கைப்பற்றல்
மேலும், அரச வைத்தியசாலைகளுக்கு மருத்துவ விநியோகப் பிரிவினால் வழங்கப்படும், தனியார் மருந்தகங்களில் விற்பனை செய்வதற்கு சட்டத்தால் தடைசெய்யப்பட்ட 8 வகையான மருந்துகளும் அங்கு கைப்பற்றப்பட்டுள்ளன. உரிய தகுதிகள் இல்லாத ஒருவரால் இந்த மருந்தகம் நடத்தப்பட்டு வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அரச வைத்தியசாலைகளுக்காக வழங்கப்படும் தடைசெய்யப்பட்ட மருந்துகள் குறித்த மருந்தகத்திற்கு எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பில் சுகாதார அமைச்சு துரித விசாரணையை ஆரம்பித்துள்ளது.
கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு பரிசீலனைக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது - சுனில் ஹந்துன்னெத்தி எம் பி
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12