யாழ். நல்லூர் ஆலய திருவிழாவின் போது திடீரென வெளியேற்றப்பட்ட பெண்!
யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், ஆலயத்தில் திருவிழா இடம்பெற்றுக் கொண்டிருந்த போது பெண்ணொருவர் திடீரென வெளியேற்றப்படும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
எதற்காக குறித்த பெண் வெளியேற்றப்பட்டார் என்பதற்கான சரியான காரணம் தெரியாமல் கூட சிலர் முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருக்கும் விதிமுறைகளை யாராக இருந்தாலும் பின்பற்ற வேண்டியது அவசியம்.
அந்தவகையில், ஆலயத்தின் உட்பகுதியில் இருந்து புகைப்படங்கள் எடுக்க அனுமதி இல்லை. எனவே, குறித்த பெண் அதனை மீறியதாகவும் அவரை வெளியில் இருந்து புகைப்படம் எடுக்குமாறு அறிவுறுத்தி வெளியேற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது உட்பட சர்வதேசத்தில் மற்றும் நாட்டில் இடம்பெற்ற முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,