மாவீரர்களை நினைவேந்த தயாராகும் மக்கள்! 2009க்கு பின்னர் என்றுமில்லாத எழுச்சி கோலம் பூண்டுள்ள முல்லைத்தீவு
தமிழ் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு மாவீரர் நாள் 2026 நிகழ்வுகள் இன்றைய தினம் (27) தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
முல்லைத்தீவில் எழுச்சி கோலம்
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தொடர்ச்சியாக மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த ஆண்டும் சில கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் நாளை நினைவு கூறுவதற்காக மிக பிரமாண்டமான அளவிலே முல்லைத்தீவு எழுச்சி கோலம் பூண்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லம், வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம், அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம், கோடாலிக்கல்லு களிக்காடு மாவீரர் துயிலும் இல்லம், மணலாறு ஜீவன் முகாம் உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்லங்களிலும் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம், இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம் , பச்சைப் புல் மோட்டை மாவீரர் துயிலும் இல்லம், இரட்டை வாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம், முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம், ஆகிய துயிலும் இல்லங்களிலும் அம்பலவன் பொக்கணை சாள்ஸ் மண்டப வளாகம், முல்லைத்தீவு கடற்கரை, ஆனந்தபுரம், கற்சிலைமடு, புதுக்குடியிருப்பு மாவீரர் மண்டபம் ஆகிய பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களிலும் இம்முறை மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன .



இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 18 மணி நேரம் முன்
ஆங்கிலக்கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை விற்பவர் மீது கைது வாரண்ட் News Lankasri