இன்னும் சில மாதங்களில் மாகாண சபை தேர்தல்..! அரச தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு
மாகாண சபைத் தேர்தலை விரைவாகவும் முறையாகவும் நடத்துவதற்கே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அதற்கான முயற்சிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தல் தொடர்பாக, திருகோணமலையில் நேற்று(11.07.2026) இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குழு நியமனம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் தொடர்பான விசேட குழு மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவில் நானும் ஒரு அங்கத்தவராக இணைந்துள்ளேன்.

இந்த குழுவின் தலைவரான வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சரின் தலைமையில் நாடாளுமன்றத்தில் மிகக் காத்திரமான பங்களிப்பினை நாங்கள் வழங்கி வருகின்றோம். பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பெண் உறுப்பினர்களுடன் இது தொடர்பாக ஏற்கனவே இரு தடவைகள் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளோம்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஆகியோரை வரவழைத்து, அவர்களின் முன்மொழிவுகள், ஆலோசனைகள் மற்றும் யோசனைகளை நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம்.
தற்போதைய நிலையில் இந்த விடயம் இன்னும் கலந்துரையாடல் மட்டத்திலேயே இருந்து வருகின்றது. தேர்தல் முறையில் உள்ள சட்டச் சிக்கல்கள் கடந்த 2015 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் இருந்த அரசாங்கத்தினால் புதிய தேர்தல் முறை ஒன்று முன்மொழியப்பட்டிருந்தது.
எனினும், அது தொடர்பாக சட்டச் சிக்கல்கள் நீடித்ததோடு, எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினைகளும் காணப்படுகின்றன.
புதிய சட்ட விதிமுறைகளுடன் மாகாண சபை தேர்தல்
இதன் காரணமாக, தற்போதைய சூழலில் விகிதாசார தேர்தல் முறையில் மாத்திரம் இந்த தேர்தலை நடத்த நாம் முயற்சி செய்தாலும், அங்கேயும் பெண் பிரதிநிதித்துவம் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பாக சில சிக்கல்கள் காணப்படுகின்றன.
விரைவில் புதிய தேர்தல் முறை இவ்வாறான நிலைக்கு மத்தியில், அனைத்து தரப்பினருடனும் நாம் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம்.

அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான புதிய தேர்தல் முறை ஒன்றின் ஊடாக மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான எல்லாவிதமான முன்னெடுப்புக்களையும் நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.
எனவே, அரசாங்கம் இந்த மாகாண சபை தேர்தலை மிக விரைவாக நடத்துவதற்கே முயற்சித்து வருகின்றது என்பதுடன், அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தற்பொழுது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri