உலகத்தையே சோகத்தில் ஆழ்த்திய பிரித்தானிய மகாராணியின் மறைவு: கோஹினூர் வைர கிரீடம் யாருக்கு..! வெளியான தகவல் (VIDEO)
பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் மறைவு உலகளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய அரசர்
இந்த நிலையில் மகாராணியின் மூத்த மகன் சார்லஸ், முன்னாள் வேல்ஸ் இளவரசர், புதிய அரசராகவும், 14 காமன்வெல்த் நாடுகளுக்குத் தலைவராகவும் நாட்டை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சார்லஸின் மனைவி கமிலா ராணியாக முடிசூடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோஹினூர் வைர கிரீடம்
இதனடிப்படையில் இந்தியா உட்பட நான்கு நாடுகள் உரிமை கொண்டாடும் கோஹினூர் வைர கிரீடம் கமிலா வசம் செல்வதாக கூறப்படுகிறது.
விலை மதிப்பற்ற வைர கற்களை கொண்ட கிரீடத்தில் 105.6 கரட் கோஹினூர் வைரம் பொருத்தப்பட்டுள்ளது.
விலை மதிப்பற்ற 2800 வைர கற்கள் கொண்டு குறித்த கிரீடம் அலங்கரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
1937ஆம் ஆண்டு ஆறாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்காக, கோஹினூர் வைரத்தை கொண்ட பிளாட்டினம் கிரீடம் ராணி எலிசபெத்திற்காக செய்யப்பட்டது.
பாரம்பரிய பொக்கிஷமாக பார்க்கப்படும் இது, பதினான்காம் நூற்றாண்டில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.