இலங்கையின் முதல் கேபிள் கார்:அரசு வெளியிட்ட முக்கிய தகவல்
அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமான எந்த முடிவையும் எடுக்கவில்லை.
சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், அனுமதி வழங்கப்படும் என்று சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்துள்ளார்.
அம்புலுவாவ கேபிள் கார் திட்டம் தொடர்பில் பல முறைப்பாடுகள் வந்ததால், திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பு
அம்புலுவாவ பகுதிக்கான ஆய்வு சுற்றுப் பயணத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜெயரத்ன, இந்தத் திட்டம் அப்பகுதிக்கு எந்த சுற்றுச்சூழல் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மாற்றப்பட்ட கருத்தையும் கூறியிருந்தார்.