இவரை கண்டால் உடன் அறிவிக்கவும் - பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
நுவரெலியாவில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து திருட முயற்சித்த சந்தேகநபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்துத்திருடும் நோக்கில் 14 ஆம் திகதி இரவு விற்பனையகத்திற்கு சந்தேகநபர் வருகை தந்துள்ளார்.
பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ள பொலிஸார்
இதன்போது கதவிலிருந்த பூட்டை திறந்து உள்ளே நுழைவதற்கு நீண்ட நேரமாக தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில் முயற்சி தோல்வியடைந்துள்ளது.

இதனையடுத்து அவர் அங்கிருந்து சென்றுள்ளமை அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமரா அமைப்பில் பதிவாகியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
சிசிரிவி காணொளிப் பதிவுகளின் உதவியுடன் சந்தேகநபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.