இந்தோனேசியாவில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை தொடர்பில் இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என இலங்கையின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை கூறியுள்ளது.
பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்
அதன்படி, கடலோரப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதுகாப்பாக உள்ளதாக தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும், நிலவரம் தொடர்ந்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவின் புளோரஸ் தீவுக்கு அப்பால் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியிருந்தது.
அதன்படி, தேசிய புவியியல் நிறுவனம் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், பின்னர் சுனாமி எச்சரிக்கைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் லப்பர் பந்து புகழ் நடிகர் தினேஷ்... வெளிவந்த ஜோடியின் போட்டோஸ்... Cineulagam
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan