அநுர ஆட்சியில் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு நடக்கும் அநியாயங்கள் - சஜித் பகிரங்கம்
அங்கவீனமுற்ற படை வீரர்கள் இரு பிரிவுகளாகப் பிரித்து இருவேறு விதமாக நடத்தப்படுவது மனித உரிமை மீறல் செயற்பாடு என்றும் இந்த குறைப்பாட்டிற்கு அரசாங்கம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்த கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(15.08.2026) இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில், கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ வீரர்களுக்கான உரிமை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டைக் காப்பாற்றுவதற்காக தமது அவயவங்கள் மற்றும் இன்னுயிரைத் தியாகம் செய்த நமது நாட்டின் வீரம் செறிந்த படை வீரர் சமூகம், நாட்டின் ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை பாதுகாப்பதில் மகத்தான சேவைகளை ஆற்றியுள்ளனர்.

அவர்களுக்குச் செலுத்தக்கூடிய உச்சக்கட்ட நன்றிக்கடனைச் செலுத்த வேண்டும்.
ஆனால், இராணுவ வீரர்களின் பல பாரதூரமான பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வுகள் கிடைக்கவில்லை என்றார்.