உலக மயமாக்கலுக்கு அமைய ரணில் எடுத்துள்ள அதிரடி முடிவு
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்மார்ட் அரசியலைத் தழுவக்கூடிய புதிய தலைமுறை தலைமைத்துவத்திற்கு தயாராகி வருவதாக கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற SMART UNP டிஜிட்டல் திட்டத்தின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ரணில் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனக்கும் வயது 70ஐ தாண்டி விட்டது. உள்நாட்டுப் போரின் பின்னர் பிறந்த Zen Beta தலைமுறையிடம் ஐக்கிய தேசிய கட்சியையும் அரசியலையும் ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் அரசியல்
கடந்த காலத் தலைவர்கள் நாட்டை வெவ்வேறு தலைமுறைகளுக்கு தயார்படுத்தியதை நினைவு கூர்ந்த முன்னாள் ஜனாதிபதி, டி.எஸ். சேனநாயக்க நாட்டை Baby Boomers தலைமுறைக்கும், ஜே.ஆர். ஜெயவர்த்தனவை Millennial தலைமுறைக்கும் தயார்படுத்தியதாகவும், இப்போது கட்சியை நவீன தொழில்நுட்பத்துடன் முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய இளைஞர்களிடம் ஒப்படைப்பதே தனது பொறுப்பாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்கால அரசியலுக்கு மெய்நிகர் யதார்த்தம் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இதற்காக கட்சிக்குள் டிஜிட்டல் நிர்வாகி மற்றும் டிஜிட்டல் அமைப்பாளர்கள் போன்ற புதிய பதவிகள் உருவாக்கப்படும்.
டிரம்பின் உலகம், சீனாவின் செல்வாக்கு மற்றும் இந்தியா ஒரு வல்லரசாக உருவெடுப்பது போன்ற உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொள்ளக்கூடிய ஒரு தலைமை நாட்டிற்கு தேவை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, SMART UNP திட்டத்தின் கீழ், சிறிகொத்தா தலைமையகம் ஸ்டார்லிங்க் தொழில்நுட்பம் மூலம் அதிவேக இணைய வசதிகளுடன் பொருத்தப்படும், மேலும் கட்சி உறுப்பினர்களுக்கு புதிய டிஜிட்டல் உறுப்பினர் அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள்... அடுத்து எடுத்த முடிவு, அய்யனார் துணை எபிசோட் Cineulagam