வெளிநாட்டில் பதுங்கியுள்ள பாதாள உலக உறுப்பினர்கள்! கசிந்த இரகசிய உரையாடல்
வெளிநாட்டில் பதுங்கியுள்ள நான்கு முக்கிய பாதாள உலக நபர்கள் கலந்துரையாடிய தொலைபேசி உரையாடலொன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இவர்கள் தங்கள் எதிர்காலத்திட்டங்கள், குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் பற்றி கலந்துரையாடியுள்ளமை தெரியவந்துள்ளது.
டுபாயில் கைது
இந்த குரல் பதிவு சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, பொலிஸார் இந்த விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சுமார் இருபத்தி இரண்டு நிமிடங்கள் நீடிக்கும் இந்த உரையாடலில், நான்கு முக்கிய பாதாள உலக நபர்களான ரஸ்ஸல் ஸ்மித், பிரான்ஸ் ரூபன், இங்கிலாந்தைச் சேர்ந்த குடு லால் மற்றும் வாலே சாரங்கா ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.
டுபாயில் கைது செய்யப்பட்ட வாலே சாரங்காவுக்கு டுபாயில் பொலிஸார் காட்டிய மோசமான நடத்தை காரணமாக நாடு திரும்பும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடிமக்களை தாக்க அந்நாட்டில் உள்ள தனது கூட்டாளிகள் தூண்டியதாகவும் அவர் உரையாடலில் கூறியுள்ளார்.