சாதனைகளின் மகாராணி இரண்டாம் எலிசபெத்
பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் மறைவு உலகளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகா ராணி எண்ணற்ற சாதனைகளை படைத்துவிட்டு, மரணத்தை தழுவி இருக்கிறார்.
சாதனைகளின் மறுபக்கமாக அவர் விளங்கி இருக்கிறார். அவரின் புகழை, சாதனைகளையும் என்றும் காலம் சுமந்து செல்லும் என்பது நிலையான உண்மை.
நீண்ட காலம் ஆட்சி
இரண்டாம் எலிசபெத் ராணி உலகளவில் மிக நீண்டகாலம் ஆட்சி நடத்தி சாதனை படைத்திருக்கிறார். 10 வயதில் அவர் ராணியாக பதவி ஏற்றுள்ளார். அவர் 1952ஆம் ஆண்டு பெப்ரவரி 6ஆம் திகதி தொடங்கி 2022 செப்டம்பர் 8ஆம் திகதி வரையில் 70 ஆண்டுகள், 214 நாட்கள் அரசாட்சி நடத்தி இருப்பது அபூர்வ சாதனை.
உலகின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியாக, பிரித்தானியாவின் அதிகாரப்பகிர்வு, ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்குதல் மற்றும் அதில் இருந்து வெளியேறுதல் என பல அரசியல் மாற்றங்களுக்கு தலைமை தாங்கி இருக்கிறார்.
இரண்டாம் எலிசபெத் ராணி பாடசாலைக்கு சென்றதில்லை.ஆனால் அவர் கல்வி பின்புலம் கொண்டவர்.
இரண்டாம் உலகப் போர்
இரண்டாம் எலிசபெத் ராணி இரண்டாம் உலகப் போரில் பணியாற்றியுள்ளார். இவர் மட்டுமே ஆயுதப்படைகளில் நுழைந்த ஒரே பெண் அரச குடும்பத்தை நேர்ந்தவர். மேலும் அவர் இறக்கும் வரை, இரண்டாம் உலகப் போரில் அதிகாரப்பூர்வமாக பணியாற்றிய அரச தலைவர் ஆவார்.
ராணி எலிசபெத் தனது வெள்ளிவிழா, பொன்விழா, வைர விழாக்களை 1977, 2002, 2012 ஆண்டுகளில் கண்டிருக்கிறார்.
70 ஆண்டு காலம் அரசாட்சி நடத்தி பவள விழா கண்டது இவர் மட்டும்தான்.
பணக்கார மகாராணி
உலகின் மிகப்பெரிய பணக்கார மகாராணி இவர் தான். இவரது சொத்து மதிப்பு 370 மில்லியன் பவுண்ட், பணமதிப்பில் சுமார் ரூ.3,441 கோடி ஆகும்.
பொதுநலவாய நாடுகளின் தலைவராக அவரது முகம் 33 நாடுகளின் நாணயங்களில் இடம் பெற்றிருப்பது தனிப்பெரும் சாதனை.
ஒலிம்பிக் போட்டிகள்
இரண்டாம் எலிசபெத் ராணி ஒன்றுக்கு மேற்பட்ட கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை தொடங்கி வைத்து சாதனை படைத்திருக்கிறார்.
1976ல் மாண்டிரியால் ஒலிம்பிக் போட்டியையும், 2012-ல் லண்டன் ஒலிம்பிக் போட்டியையும் இவர்தான் தொடங்கி வைத்தார்.
இளவரசர் பிலிப்புடனான ராணி எலிசபெத்தின் திருமண வாழ்க்கை, பிலிப் மரணம் அடைகிற வரையில் 73 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்திருப்பது சாதனை.
பிரித்தானிய மன்னராக சார்லஸ் மகுடம் சூட 70 வருடங்கள், 214 நாட்கள் காக்க வைத்ததும் ஒரு சாதனை.
கடவுச்சீட்டு இன்றி உலகை சுற்றிவந்தவர்
வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணம் செல்வதில் ஆர்வம் கொண்டிருந்த இரண்டாம் எலிசபெத் ராணியிடம் கடவுச்சீட்டு கிடையாது. அவரிடம் வாகன ஓட்டுனர் உரிமமும் அவரிடம் கிடையாது.
இரண்டாம் எலிசபெத் ராணி தனது 89 வயதில் 2015ஆம் ஆண்டு தனது வெளிநாட்டு பயணங்களை நிறுத்தும்வரையில், உலகம் முழுவதும் 42 முறை பயணம் செய்திருக்கிறார். மிக நீண்ட வெளிநாட்டு பயணத்தையும் அவர் மேற்கொண்டிருக்கிறார்.
1953 நவம்பர் முதல் 1954 மே வரையில் 168 நாட்கள் 13 நாடுகளுக்கு தொடர்ந்து பயணம் செய்துள்ளார்.
இன்ஸ்டாகிராம்
ராணி எலிசபெத் மரணம் வரையில் இங்கிலாந்து அரச குடும்பத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 1 கோடியே 11 லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்திருப்பதும் சாதனையே.
1,333 வைரங்கள் பதித்த கிரீடம்
1953ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத் ராணி முடிசூட்டிக்கொண்ட ஊர்வலத்தில் 16 ஆயிரம் பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஊர்வலம் 2 மைல் நீளம் கொண்டது.
ராணியின் கிரீடத்தில் 1,333 வைரங்கள் பதித்திருப்பதும் சாதனை.
இரண்டாம் எலிசபெத் ராணி 600 அறக்கட்டளைகளுக்கும், அமைப்புகளுக்கும் சொந்தமானர்.
30 செல்ல நாய்களை ராணி எலிசபெத் வளர்த்திருக்கிறார். சிறுவயதில் இருந்தே செல்ல நாய்களை வைத்திருந்தார்.
இவ்வாறு எண்ணிலடங்காத பல சாதனைகளின் மகாராணியாக இரண்டாம் எலிசபெத் ராணி திகழ்ந்திருக்கிறார்.