ராணியின் மரணத்திற்குப் பிறகு பிரித்தானியாவில் நடப்பது என்ன...!
மகாராணி எலிசபெத் காலமானதையடுத்து, பிரித்தானியாவில் பத்து நாட்களுக்கு துக்க தினமாக அனுஷ்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்திற்கு பிரித்தானிய மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ராணியின் மரணம் பிரித்தானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு துயர செய்தியாகும்.
இந்நிலையில் அந்நாட்டின் உத்தியோகபூர்வ நிகழ்வுகளின் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
வங்கி விடுமுறை வழங்கப்படுமா
ராணியின் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் மூன்று நாட்கள் வைக்கப்பட்டு 10 ஆவது நாள், அரசு முறைப்படி இறுதிச்சடங்குகள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என தெரியவந்துள்ளது.
இது வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது, ஆனால் இதை அரண்மனை மற்றும் பிரித்தானிய அரசாங்கம் இதுவரை உறுதிசெய்யவில்லை.
அதேநேரம் பிரித்தானியாவில் உள்ள பாடசாலைகளும் மூடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கல்வித் திணைக்களம் மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட நிர்வாகங்கள் ஆலோசனைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரத்து செய்யப்படும் நிகழ்வுகள்
ஆங்கில கால்பந்து லீக் மற்றும் வடக்கு அயர்லாந்து கால்பந்து லீக்கில் கால்பந்து போட்டிகள் உட்பட திட்டமிடப்பட்ட விளையாட்டு போட்டிகள் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டுள்ளன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரிட்டிஷ் குதிரை பந்தய ஆணையத்தால் அனைத்து பந்தயங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன, ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த BMW PGA சாம்பியன்ஷிப் விளையாட்டும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டூர் ஆஃப் பிரிட்டன் சைக்கிள் பந்தயத்தின் ஆறாம் நிலை போட்டிகளும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் இரண்டாம் நாள் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள ஐந்து நாள் ஆட்டம் நடைபெறுமா என்பது உறுதி செய்யப்படவில்லை.
இறுதிச் சடங்கிற்கு முன் நடைபெறும் நினைவுச் சேவைகள்
செயின்ட் பால்ஸ் கதீட்ரலில் பிரதமர் மற்றும் பிற மூத்த அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நினைவுச் சேவை நடைபெறும்.
ராணியின் இறுதிச் சடங்கிற்கான திட்டங்கள்
ராணி ஸ்காட்லாந்தில் இறந்ததால், லண்டனுக்கு ராணியின் உடல் கொண்டு வரப்பட்டு நான்கு நாட்களுக்கு வெஸ்ட் மினிஸ்ட்டர் அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
இறுதிச் சடங்கு முடிந்து காலை வரை அரசுக் கட்டிடங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில், 24 மணி நேர காலத்திற்கு தேசியக் கொடி முழுக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.
வெள்ளிக்கிழமை, வெஸ்ட்மின்ஸ்டர் அபே, செயின்ட் பால்ஸ் கதீட்ரல் மற்றும் வின்ட்சர் கோட்டை ஆகியவற்றில் ராணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மணிகள் ஒலிக்கப்படும்.
அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வருடத்தையும் குறிக்கும் வகையில் 96 சுற்றுகளின் துப்பாக்கி வணக்கங்கள் ஹைட் பார்க் மற்றும் பிற இடங்களில் சுடப்படும்.

மைனா படத்தில் போலீஸ் ரோலில் நடித்த இந்த நடிகரை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

ட்ரம்பிற்கு ஜனாதிபதியாக பணியாற்ற உடற்தகுதி இருக்கிறதா? வெளியான மருத்துவ பரிசோதனை அறிக்கை News Lankasri
