புடின் பின்வாங்கினால் படுகொலை செய்யப்படுவார்: எலான் மஸ்க் எச்சரிக்கை

Vladimir Putin Russo-Ukrainian War Elon Musk
By Dharu Feb 13, 2024 05:13 PM GMT
Report

ரஷ்யா - உக்ரைன் போரில் விளாடிமிர் புடின் பின்வாங்கினால் அவர் படுகொலை செய்யப்படுவார் என டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர், இஸ்ரேல் - ஹமாஸ் மோதல், சீனா - தாய்வான் பதற்றம் ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்து அமெரிக்க குடியரசுக் கட்சியின் செனட்டர்களிடம், எக்ஸ் ஸ்பேசஸ் தளம் மூலம் கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வில், விஸ்கான்சின் ரான் ஜான்சன், ஓஹியோவின் ஜேடி வான்ஸ், உட்டாவின் மைக் லீ, குடியரசுக் கட்சியின் விவேக் ராமசாமி, கிராஃப்ட் வென்ச்சர்ஸ், எல்.எல்.சி-யின் இணை நிறுவனர் டேவிட் சாக்ஸ் ஆகியோருடன் டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் கலந்துகொண்டார்.

இலங்கை போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ள கனடா

இலங்கை போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ள கனடா

புடினுக்கு அழுத்தம்

குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே எலான் மஸ்க் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

புடின் பின்வாங்கினால் படுகொலை செய்யப்படுவார்: எலான் மஸ்க் எச்சரிக்கை | Putin Backs Down He Will Be Assassinated

'' உக்ரைன் வெற்றியை எதிர்பார்ப்பவர்கள் கற்பனை உலகில் வாழ்கிறார்கள். உக்ரைன், இஸ்ரேல், தைவானுக்கு 95 பில்லியன் டொலர் உதவி வழங்கப்பட்டிருக்கிறது.

இதில் உக்ரைனுக்கு மாத்திரம் 60 பில்லியன் டொலர் உதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த உதவி உக்ரைனுக்கு பலனளிக்காது.

போரை நீடிப்பதும் உக்ரைனுக்கு நல்லதல்ல. அதே நேரம் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர புடினுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் அவர் பின்வாங்கினால் படுகொலை செய்யப்படுவார். போரின் இரு தரப்பிலும் உள்ள மக்களின் இறப்பைத் தடுப்பதில்தான் நான் ஆர்வமாக இருக்கிறேன்.

பாலஸ்தீன - இஸ்ரேல் யுத்தம்: யார் வெற்றிபெற்றனர்..!

பாலஸ்தீன - இஸ்ரேல் யுத்தம்: யார் வெற்றிபெற்றனர்..!

ரஷ்யாவின் ஆட்சி மாற்றம்

ரஷ்ய ஜனாதிபதி புடினை ஆட்சியிலிருந்து இறக்க முயல்வதுதான் புத்திசாலித்தனம். ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தை விரும்பினால், புடினை எதிர்த்து நிற்கக்கூடிய நபர் யார் என்பதையும் சிந்திக்க வேண்டும்.

புடின் பின்வாங்கினால் படுகொலை செய்யப்படுவார்: எலான் மஸ்க் எச்சரிக்கை | Putin Backs Down He Will Be Assassinated

அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் நபர் அமைதியானவராக இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய சூழலில் யாரும் அவ்வாறு இல்லை.

புடினுக்கு மாற்றாக ஒருவரைக் கொண்டு வந்தாலும், அவர் புடினைவிடக் கூடுதல் வேகம் கொண்டவராகத்தான் இருப்பார்" என்றார்.

மின்னஞ்சலுக்கு கூகுள் விதித்த புதிய கட்டுப்பாடு

மின்னஞ்சலுக்கு கூகுள் விதித்த புதிய கட்டுப்பாடு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US