மாகாணசபைத் தேர்தலை நடத்தும் நோக்கம் அரசுக்குக் கிடையாது! அறிக்கை சமர்ப்பிப்பிலும் தாமதம் என சஜித் அணி குற்றச்சாட்டு
மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் மீது நம்பிக்கையில்லை எனவும், முன்வைக்கப்படும் சிறந்த யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் அந்தக் குழு இதுவரையில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனவும் செயற்குழுவின் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளருமான ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்துள்ளார்.
காலத்தை வீணடிக்கும் செயற்பாடுகளில் பங்காளியாக முடியாது என்பதாலேயே செயற்குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜித ஹேரத் முன்வைத்த கருத்து
மாகாண சபைத் தேர்தல் விசேட செயற்குழுவின் நடவடிக்கைகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்வதில்லை எனச் செயற்குழுவின் தலைவரான அமைச்சர் விஜித ஹேரத் முன்வைத்த கருத்துத் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மாகாண சபைத் தேர்தலை நடத்தும் நோக்கம் அரசுக்குக் கிடையாது. மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பது குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை. கடந்த செப்டெம்பர் மாதம் செயற்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.
எதிர்வரும் மாதம் 17ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய தினமும் அறிக்கை சமர்ப்பிக்கப்படாமல் காலத்தை மேலும் நீட்டிக்கும் சாத்தியமே காணப்படுகின்றது.

சாதகமான யோசனை
பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்த தனிநபர் பிரேரணை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு சாதகமான யோசனைகளை முன்வைத்துள்ளன.
ஆனால், செயற்குழு அது குறித்து எவ்விதக் கவனமும் செலுத்தவில்லை. மாகாண சபைத் தேர்தலில் நடைமுறையில் காணப்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, புதிய சிக்கல்களை உருவாக்கும் வகையிலேயே செயற்குழுவில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் செயற்படுகின்றனர்.
இந்த அரசின் மீதான மக்களின் நம்பிக்கை வெகுவாகச் சிதைவடைந்துள்ளது. ஆகவே, அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாது என்பதை உறுதியாகக் குறிப்பிட முடியும். காலத்தை வீணடிக்கும் அரசின் செயற்பாட்டில் பங்காளியாக முடியாது என்பதற்காகவே இந்தக் குழு நடவடிக்கைகளில் நாங்கள் பங்கேற்கவில்லை என்றார்.
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan