ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று நிரந்தர ஆசிரியர் நியமனத்தை வழங்குமாறு சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இதன் காரணமாக பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல்
இன்று (27) காலை அவர்கள் "நீதியின் மரணம்" எனக் குறிப்பிட்டு சவப்பெட்டியொன்றை எரித்ததுடன், அதனை உடனடியாக அகற்றுமாறு பொலிஸார் அறிவித்தனர்.

மேலும், நடைபாதையை மறித்து உண்ணாவிரதம் மேற்கொள்வதற்கு பொலிஸார் எதிப்பு வெளியிட்ட நிலையில், போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
7 ஆண்டுகளாக பாடசாலைகளில் கற்பித்த தங்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று கோரி நேற்று (26) காலை முதல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
எனினும், இதுவரை பதில் இல்லாத காரணத்தினால், நான்கு போராட்டக்காரர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam