யாழ்.பல்கலைக்கழக விலங்கியல் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியராக பதவி உயர்வு
யாழ்.பல்கலைக்கழக விலங்கியல் துறையின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி தம்பு ஈஸ்வரமோகன் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இதற்கான ஒப்புதலை பல்கலைக்கழகப் பேரவை இன்று வழங்கியுள்ளது.
பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி
இதன்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவி உயர்வுக்காக விண்ணப்பித்த கலாநிதி தம்பு ஈஸ்வரமோகனின் விண்ணப்பத்தின் துறைசார் நிபுணர்களின் மதிப்பீட்டு அறிக்கை, நேர்முகத் தேர்வு முடிவுகள் ஆகியன இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
இவற்றின் அடிப்படையில், விலங்கியல் துறையின் முன்னாள் தலைவரும், விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி தம்பு ஈஸ்வரமோகன் விலங்கியலில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 1 மணி நேரம் முன்

புதிய கட்டத்திற்கு நகரும் கனடா-இந்தியா உறவுகள்: மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்ப முயற்சி News Lankasri
