யாழ்.பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியர் ஒருவர் பேராசிரியராக பதவி உயர்வு
யாழ்.பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியர் ஒருவர் திறமை அடிப்படையில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
விஞ்ஞான பீடத்தின் தாவரவியற் துறையைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் பி.செவ்வேள் தாவரவியலில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்படுவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று காலை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.
பதவி உயர்த்தப்பட்ட பேராசிரியர்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த இணைப் பேராசிரியர் பி. செவ்வேளின் மதிப்பீடு, நேர்முகத் தேர்வு முடிவுகள் இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அவற்றின் படி, தாவரவியற் துறையைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் பி. செவ்வேள்
தாவரவியலில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam