வசந்த கரண்ணாகொட மற்றும் மகன் யோஷித ராஜபக்ச விவகாரம் - 25 சாட்சிகளுடன் குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரண்ணாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
முறையான கல்வித்தகுதிகள் இன்றி யோஷித ராஜபக்சவை கடற்படையில் சேர்த்தல் மற்றும் அவருக்கு பிரிட்டிஷ் அரச இராணுவ கல்லுரியில் பயிற்சி அளித்தல் ஆகியவற்றின் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தி, யோஷித ராஜபக்சவிற்குப் பயனளித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
25 சாட்சிகள் பெயரிடல்
இந்த வழக்கில் வசந்த குமார ஜெயதேவ கரண்ணாகொட முதல் பிரதிவாதியாகவும், யோஷித கனிஷ்க ராஜபக்ச இரண்டாவது பிரதிவாதியாகவும் பெயரிடப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கிற்காக 25 சாட்சிகளின் பெயர்களையும், 47 ஆதார ஆவணங்களின் பட்டியலையும் இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri