பொது போக்குவரத்துக்கு தகுதியற்றவர்கள் குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
2025 டிசம்பர் 31ஆம் திகதிக்குள் அனைத்து பொதுப் போக்குவரத்து ஓட்டுநர்களும் பொதுப் போக்குவரத்து உரிமத்தைப் பெறுவது கட்டாயமாக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
அம்பாறையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர், இதற்கு தேவையான அனைத்து விதிமுறைகளும் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
தற்போது இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகளில் ஆசனப்பட்டிகள் பொருத்தப்படவில்லை என்றாலும், ஆசனப்பட்டிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு மிகுந்த வேலை
இதேவேளை பொதுப் போக்குவரத்துத் துறையை பொறுப்பானவர்களே கையாள வேண்டும்.
இதனை விடுத்து, அந்தத் தொழிலை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவர்கள், பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்றவர்கள் அல்ல என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 2 மணி நேரம் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
